பேராறு பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் திறப்பு விழா நிகழ்வும், அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

குறித்த அபிவிருத்தி நிகழ்வு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹறூப் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது பேராறு இரண்டாம் கொலனி முகைதீன் ஜூம்ஆ பள்ளியின் சுற்று மதில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அஸ்சபா பாடசாலை வீதி சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில் கம்பரெலிய திட்டத்தின் கீழ் கொங்ரீட் வீதி திறந்து வைக்கப்பட்டதுடன், இதே பகுதியில் சுமார் இருபது இலட்சம் ரூபா செலவில் அமையப் பெறவுள்ள சிறுவர் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டும் அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச சபையின் உபதலைவர், சட்டத்தரணி மதார், சட்டத்தரணி பௌமி உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்