இளைஞர் யுவதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் போட்டி நிகழ்வுகள்

Report Print Kumar in சமூகம்

கிராம மட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் திறமைகளை தேசிய ரீதியில் கொண்டுசெல்லும் வகையிலான நடவடிக்கைகளை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலான போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

மாவட்ட இளைஞர் விருதுகள் போட்டி என்னும் தலைப்பில் இந்த போட்டிகள் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் இளைஞர் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இந்த போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் ஏ.ஹமீர் தலைமையில் இந்த போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.

நடனம், இசை, பாட்டு, அறிவிப்பு, நாடகம் உட்பட 15க்கும் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இதில் பெருமளவான இளைஞர் யுவதிகள் பங்குகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14பிரதே செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடாத்தப்படும் இந்த போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துவோர் தேசிய ரீதியான போட்டிகளில் பங்குபெறும் சந்தப்பத்தினை பெற்றுக்கொள்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்