கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 108 தேங்காய் உடைத்து வழிபாடு

Report Print Theesan in சமூகம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த வேண்டும் என கோரி நடத்தப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தரமுயர்த்த வேண்டுமெனவும் கோரி வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு இடம்பெற்றுள்ளது.

வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியமும் சமூக அமைப்புக்களும், ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.

கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர் ஆலய முன்றலில் 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டுள்ளது.

இதன்போது மடுக்கந்த மூவட்டகம ஆனந்த தேரோ, முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகரதாலிங்கம், ராஜா குகனேஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers