வாழைச்சேனையில் பொதுமக்களை அனர்த்தத்தில் இருந்து மீட்பது தொடர்பான கருத்தரங்கு

Report Print Navoj in சமூகம்

பொதுமக்களை அனர்த்தத்தில் இருந்து மீட்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கள உத்தியோகத்தர்களுக்கான இந்த கருத்தரங்கு வாழைச்சேனை செயலக கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவனின் வழிகாட்டலில், பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.சுரேஸ்குமார் தலைமையில் இந்த கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது.

இதன்போது அனர்த்த நிவாரண சேவை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.சியாத், வாழைச்சேனை பொதுச் சுகாதார மேற்பார்வையாளர் இ.நிதிராஜ், பொது சுகாதார பரிசோதகர் எஸ்.யசோதரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு அனர்த்தம் தொடர்பான கருத்துக்களை வழங்கியுள்ளனர்.

இதில் செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.பாஸ்கரன், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் செயலக கள உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் பிரதேச கள உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த விழிப்புணர்வு பயிற்சி நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்