ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்காக விசேட ஆராதனை

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் விஷேட ஆராதனையும், திருப்பலி ஒப்புக் கொடுத்தலும் நடைபெற்றுள்ளது.

ஆலயத்தின் பங்கு தந்தை வணக்கத்துக்குரிய அருட்தந்தை நியூமன் பீரிஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மத்திய மாகாண ஆயர் பிரான்சிஸ் வியாணி பர்ணான்டோ கலந்து கொண்டு திருப்பலி ஒப்பு கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த குண்டு தாக்குதலில் சிக்கி உயிர் நீத்த ஹட்டன், தலவாக்கலை, மஸ்கெலியா பகுதிகளை சேர்ந்த சிறு குழந்தை உட்பட ஆறு பேரின் குடும்ப அங்கத்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களும், ஏனையவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்