கிளிநொச்சியில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி படைகளின் கட்டளையகத்தின் 57 வது படைப்பிரிவும், தேசிய பாரம்பரியங்களை பாதுகாக்கும் மகா சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த வெசாக் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த வெசாக் தின நிகழ்வு நேற்றும் இன்றும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி தர்மபுரம் விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற குறித்த வெசாக் நிகழ்வினை கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன்போது வெசாக் கூடுகள் மைதானத்தை அலங்கரித்தன. தொடர்ந்து வெசாக் பக்தி கீதங்களும் இசைக்கப்பட்டன. குறித்த நிகழ்விற்கு வருகை தந்த மக்களுக்கு அன்னதானமும் இடம்பெற்றதுடன், பாடசாலை மாணவர்களின்கு வங்கிக் கணக்குகளும், பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்