களுத்துறை - பேருவளையில் வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாளையதினம் வெசாக் வாரம் ஆரம்பமாகிறது. இதனை முன்னிட்டு நாடாளவிய ரீதியில் அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாரிய வெசாக் பந்தல்களை அமைக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பேருவளை நகரில் சிறிய அலங்கார தோரணங்களை அமைக்கும் பணியில் அந்தப் பகுதி முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டனர்.
இலங்கையில் சிங்கள - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தும் வகையில் சில தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் பௌத்த நிகழ்வான வெசாக் கொண்டாட்டத்தில் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டுள்ளமை இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக பாராட்டப்பட்டுள்ளது.