குமுதினிப் படுகொலையின் நினைவு நாள் நிகழ்வுகள்

Report Print Arivakam in சமூகம்

குமுதினி படகில் பயணித்த போது நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 34ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன.

படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வின் நினைவு சுடரினை அந்த கடலில் பயணித்து தன்னுடைய 7 மாத குழந்தையை பறிகொடுத்த தாய் ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து பசுந்தீவு ருத்ரனின் நீலக்கடலலையின் நினைவுகள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழாவும் இடம்பெற்றுள்ளது.

நீலக் கடல் அலையின் நினைவுகள் பாகம்-3 எனும் நூலினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியிட்டு வைக்க நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர் பெற்றுக்கொண்டார்.

சிறப்புப் பிரதிகளை நூலாசிரியரிடம் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் சிவாஜிலிங்கம் அனந்தி சசிதரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் அருட்தந்தை அருட்சகோதரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...