படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி!

Report Print Mohan Mohan in சமூகம்

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

காணாமற்போனோரின் உறவினர்கள் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டதுடன், யுத்தத்தில் சிக்கி உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்காக அஞ்சலி செலுதியுள்ளனர்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் மே மாதம் நடுப்பகுதி வரை சிறுவர்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் யுத்ததாக்குதல்களுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்காக மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பொது நினைவேந்தல் வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து உறவினர்கள், நண்பர்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...