மாந்தை மேற்கு கிராம வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட 04 கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் குறித்த வீட்டுத்திட்ட பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மாதிரிக் கிராமங்களை உருவாக்கும் திட்டம் இன்று ஆரம்பித்த வைக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சன்னார், வெள்ளாங்குளம், வேட்டையா முறிப்பு பரப்புக்கடந்தான் ஆகிய ஆகிய 4 கிராமங்களிலும் 84 வீடுகள் அமைத்துக் கொடுக்கும் வகையில் முதற்கட்டமாக அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டுள்ளார். இதன்போது வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

மாந்தை மேற்குபிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், மன்னார் மாவட்ட வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்