தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடைய அஞ்சலி

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனவும்கோரி மஸ்கெலியா நகர மைதானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த அஞ்சலி இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி கூட்டத்தில் மஸ்கெலியா பொலிஸார், மூவின மத தலைவர்கள், பாடசாலை அதிபர், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இலங்கையில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும். தீவிரவாதம் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்