பரந்தனில் 77 குடும்பங்களுக்கு நிரந்த வீடு

Report Print Suman Suman in சமூகம்

பரந்தன் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட 77 குடும்பங்களுக்கான நிரந்த வீடுகளுக்கான அடிக்கல் இன்று நாட்டிவைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில் 77 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பா.ம உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று பகல் 10 மணியளவில் கிளிநாச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள சிவபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் , கண்டாவளை பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers