குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் உயிரிழந்த இலங்கை மக்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதில் சர்வ மத தலைவர்கள், அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் 21ஆம் திகதி கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு

இந்த நாட்டில் பயங்கரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் வை.மோகன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, கடுக்காமுனையில் தொடர் குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு செல்லவும் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி பெறவும் விசேட பூஜை வழிபாடுகள் இன்று நடைபெற்றுள்ளன.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட கடந்த 21ம் திகதி இலங்கை முழுவதையும் சோகத்தில் ஆழ்த்திய தொடர் குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு செல்லவும் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி பெறவும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

அதனைத் தொடர்ந்து உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் வை.மோகன்,ஆலய நிர்வாகத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers