வவுனியாவில் விவசாய மக்களுக்கு வழங்கப்பட உள்ள நீர் இறைக்கும் இயந்திரம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் 50 வீத மானியத்தில் சூரிய கலத்துடன் கூடிய நீர் இறைக்கும் இயந்திர தொகுதி விவசாய மக்களுக்கு வழங்கவுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

சூரியகலம் தொடர்பாக அவர் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

சூரிய கலத்தில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரம் விவசாயிகளின் நலன் கருதி வழங்கவுள்ளோம்.

397,000 ரூபாய் பெறுமதியான இவ் சூரிய கலத்துடன் கூடிய நீர் இறைக்கும் இயந்திரம் 50 வீத மானிய அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

மேலும் இதனை பெற்றுக்கொள்வதற்கு விவசாயிகளிடம் காணி, வீடு மற்றும் மின்சார பட்டியல் என்பன இருந்தாலே போதுமானதாகும்.

இதனை பெற விரும்புபவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கமநல சேவை திணைக்களங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்வதோடு இது தொடர்பான மேலதிக விபரங்களை கமநல சேவை திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...