டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் இன்று அதிகரிப்பு!!

Report Print Vethu Vethu in சமூகம்

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாயின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176.66 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 172.82 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அண்மைய காலமாக தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் திடீரென உயர்வடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது.

நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விபரம் வெளியாகியுள்ளது.

அதற்கமைய நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.2357 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 173.3888 ரூபாவாக பதிவாகியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

கடந்த மாதங்களில் 184 ரூபாவை கடந்த இலங்கை ரூபாவின் பெறுமதி தற்போது வலுவான நிலையில் உள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்