கடும் வறட்சியான காலநிலையில் அரசாங்கத்தின் விசித்திர செயற்பாடு

Report Print Kamel Kamel in சமூகம்

நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வரும் இந்த தருணத்தில் அரசாங்கத்தின் விசித்திரமான செயற்பாடு குறித்து விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் மிகவும் கடுமையான வறட்சி நிலவி வரும் இந்த காலப் பகுதியில் அரசாங்க அதிகாரிகள் பாடசாலை மாணவர்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி வருகின்றனர்.

பருகுவதற்கே நீர் இன்றி அல்லலுறும் வடக்கு மக்களினால் தற்பொழுது தென்னங்கன்று ஒன்றை நட்டு பராமரிப்பது நடைமுறை சாத்தியமற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையில் வடக்கில் மழை வீழ்ச்சி பெறுவதற்கான சாத்தியங்கள் அற்ற நிலையில் அரசாங்க அதிகாரிகள் இவ்வாறு வடக்கில் தென்னை செய்கையை விஸ்தரிக்கும் நோக்கில் கன்றுகளை வழங்கி வருகின்றனர்.

பிள்ளைகள் இந்த தென்னங்கன்றுகளை ஆசையாக வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் போதும் அவற்றை பராமரிக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

மேலும் இவ்வாறான வறட்சியான காலநிலையில் எவ்வாறு தென்னங்கன்றுகளை பராமரிக்க முடியும் என பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் வீடுகளில் ஓரமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை அமுல்படுத்தும் அரசாங்க அதிகாரிகளுக்கு அடிப்படை சிந்தனை கூட இல்லாமை நாட்டின் சாபக்கேடு என கொழும்பு சிங்கள ஊடகமொன்று இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்