இலங்கையில் அதிநவீன கார் வாங்க காத்திருப்போருக்கு......

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும் வாகனமான Wagon-R மோட்டார் வாகனத்தை இனிமேல் இருக்குமதி செய்யாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இன்திக சம்பத் மெரின்ச்சிகே இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நடப்பாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களுக்கான வரி அறவீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் Wagon-R மோட்டார் வாகன இறக்குமதியை நிறுத்தப்படவுள்ளது. இதன் மூலம் நாட்டின் வாகன இறக்குமதி தொழிற்துறை பாரிய வீழ்ச்சிக்குள்ளாகும்.

Wagon-R மோட்டார் வாகனங்கள் ஜப்பானில் இருந்து இதுவரை 55000 ற்கும் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதில் 50,000 ற்கும் அதிகமானவை ஹைட்பிரிட் என இனங்காணப்பட்டு சுங்கப்பிரிவால் விடுவிக்கப்பட்டுள்ளது. C200 Benz ரக வாகனம் ஹைட்பிரிட் அல்ல என சுங்க ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் MH55S Wagon R மோட்டார் வாகனம் தொடர்பில் எவ்வித சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.

அத்துடன் சுங்க பிரிவினால் Wagon-R வாகனம் பெற்ரோல் வாகனம் எனக் கருதி விடுவிக்கப்பட்டமையினால் 125000 ரூபாவுக்கு மேலதிக வரியை செலுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய Wagon-R வாகனத்தின் மூலம் 1625000 ரூபா வரியை அறவிடுகின்றது. குறித்த வரி கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் 825000 ரூபாவாக காணப்பட்டது

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான வரி அறவீடுகள் மூலம் 48,000 மில்லியன் ரூபா வருவாய் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அந்த தொகையானது ஒட்டுமொத்த வரி அறவீட்டு வருமானத்தில் 38 சதவீதமாகும். வாகன இறக்குமதி வீழ்ச்சியடைந்தால் அனைத்து வரி அறவீடுகளும் இன்றி நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

இதனால் சுங்க திணைக்களத்தினால் Wagon-R வாகனங்களுக்காக அறவிடும் வரியை நிறுத்துவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers