மன்னாரில் தந்தை செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்த தினம் அனுஷ்டிப்பு

Report Print Ashik in சமூகம்

தந்தை செல்வநாயகத்தின் 121வது பிறந்த தினம் மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில், மன்னார் நகர சபை உறுப்பினர் திருச்செல்வம் சந்திரன் தலைமையில், மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டுள்ளதுடன்,பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது தமிழ் சேதசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச தலையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி,மன்னார் நகர சபையின் உப தலைவர் எஸ்.எஸ்.ஜாட்சன்,வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளனர்.

வவுனியா

தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 121 ஆவது ஜனன தினம் வவுனியாவில் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், முன்னாள் வடமாகாண சபை சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தலைமையில் வவுனியா பிரதான மணிக்கூட்டுப் கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.

குறித்த நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான சேனாதிராஜா, சுமந்திரன், பரதலிங்கம், வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினர் உத்திரியநாதன், தமிழரசு கட்சியின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம்

தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 121 ஆவது ஜனன தினம் யாழில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தின் கூட்டணி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...