மின் பிறப்பாக்கிகளின் விற்பனையில் உயர்வு

Report Print Ajith Ajith in சமூகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார விநியோகப் பிரச்சினை காரணமாக சிறிய ரக மின் பிறப்பாக்கிகளின்( ஜெனரேட்டர்) விற்பனையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள், மற்றும் சிறிய வியாபாரிகள் என்று பலரும் இதன் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக வர்த்தகத்துறை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 10 நாட்களுக்குள் மின்சார விநியோக பிரச்சினை தீர்ந்துவிடும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார். எனினும் நடைமுறையில் உள்ள காலநிலையை அவதானிக்கும் போது இது நீடிக்கும் என்றே கருதப்படுகிறது.

தமிழ், சிங்கள புதுவருட நாட்களில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்படுத்தப்படாத போதும் அதற்கு பின்னர் அது தொடரலாம் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...