மடு வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டி

Report Print Ashik in சமூகம்

மடு வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டியின் இறுதி நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மடு வலய கல்வி பணிப்பாளர் கே.சத்தியபாலன் தலைமையில் அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

கடந்த 07ஆம் திகதி ஆரம்பமான குறித்த போட்டியின் இறுதி நிழ்வில் விருந்தினர்களாக வவுனியா கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி கே.சுவர்ணராஜா, வட மாகாண உதவி கல்வி பணிப்பாளர் ஆர்.ராஜசீலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மடு வலயக்கல்வி பணிமனைக்கு உட்பட்ட 51 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதல் மற்றும் வெற்றிக் கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்