பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா இடம்பெற்றுள்ளது.

மூதூர் மத்திய கல்லூரி மண்டபத்தில் இன்று அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பும், ஓய்வு பெற்ற முதலாந்தர அதிபர்களுக்கான கௌரவிப்பும் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், கே.துரைரட்ணசிங்கம், முன்னாள் மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம், மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அரூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers