உலகின் மிக குறைந்த வயதுடைய புத்தக ஆசிரியராக மாறிய இலங்கை சிறுவன்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையை சேர்ந்த சிறுவன் உலகின் மிக இளம் வயது புத்தக ஆசிரியராக கூகுள் நிறுவனத்தினால் பெயரிடப்பட்டுள்ளார்.

வேயங்கொட தூய மரியா வித்தியாலயத்தில் 4ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இசுரு அருணோத நாகந்தல என்ற மாணவனே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரால் ஹொரகொல்ல தேசிய வனவிலங்கு காடு குறித்து எழுதப்பட்ட ஆங்கில கட்டுரை ஒன்றை கூகுள் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் கூகுள் நிறுவனத்தினால் அமெரிக்க நாட்டை சேர்ந்த 9 வயது சிறுவனின் கட்டுரையே பதிவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த சாதனையை இலங்கையை சேர்ந்த 8 வயது சிறுவன் முறியடித்து உலகின் இளம் ஆசிரியராக பெயரிடப்பட்டுள்ளார்.

தனது மகனுக்கு கிடைத்த சர்வதேச அங்கிகாரம் குறித்து சிறுவனின் தந்தை மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்