திருகோணமலை - கிண்ணியா பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விழிப்புணர்வு சுகாதாரக் கழகத்தின் பொறுப்பாசிரியர், ஆசிரியையின் நெறியாள்கையில் பாடசாலை முதல்வர் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வின் வளவாளராக வைத்தியர் ஏ.எம்.எம்.நஸீர் கலந்து சிறப்பித்துள்ளார். தடுப்பூசி தொடர்பான பிழையான புரிதல்கள் பற்றிய தெளிவுகளையும் தடுப்பூசியின் முக்கியத்துவங்களையும் தனது உரையில் ஞாபகப்படுத்திச் சென்றார்.