தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வுகள்

Report Print Rusath in சமூகம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தலைமையில் நேற்று மட்டக்களப்பு கல்லடி மீன் இசைப் பூங்காவில் நடைபெற்றது.

கல்லடிப் பாலத்தின் அருகில் அமைந்துள்ள ஒளவையார் சிலைக்கு கொழும்பு கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் மலர் மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன்போது கலைக் கோகிலம் மாணவர்களின் கலைகலாசார நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதோடு தாய்மொழியின் தொன்மை பற்றி கம்பவாரிதி சொற்பொழிவாற்றியுள்ளார்.

மேலும் மாநகர சபையின் கலைக் குழுத் தலைவர் வே. தவராஜா வரவேற்புரையையும் 'தமிழ்மொழி இன்னும் இனியும்' எனும் தலைப்பில் ஏ.ஏ.நவரட்ணம் நவாஜி சொற்பொழிவாற்றியுள்ளதோடு இன்னும் பல தமிழ் மொழி ஆர்வலர்களும் நிகழ்வுகளில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா. சிறிநேசன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.துரைராசசிங்கம், பொன்.செல்வராசா, கோவிந்தன் கருணாகரன், வரத்ததக சங்கத்தினர், தமிழ் சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலருர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்