கிண்ணியா பிரதேசத்தில் புதிய மைதானம் திறந்து வைப்பு!

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கற்குழிப் பகுதியில் விளையாட்டு வீரர்கள் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க புதிய மைதானம் ஒன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று சூரங்கல் வட்டார வேட்பாளர் ஜௌபரின் கோரிக்கைக்கு அமைய பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூபின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பிரதியமைச்சரால் திறந்து வைத்து பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

காணி கொள்வனவு செய்து புதிய மைதானத்தின் தேவை கருதி குறித்த மைதானம் அப்பகுதி விளையாட்டு வீரர்களுக்கு கையளிக்கப்பட்டது. சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் இப் புதிய மைதானம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து 17 கழகங்கள் பங்குபற்றிய மென்பந்து சுற்றுத் தொடரும் இடம்பெற்றுள்ளது.

இறுதிச் சுற்றுக்கு கிண்ணியா ஈரானி மற்றும் புளூபேர்ட்ஸ் அணிகள் தெரிவு செய்யப்பட்டு ஒன்றையொன்று எதிர்த்தாடின இதில் புளூபேர்ட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

முதலாம் இடத்தை பெற்ற அணிக்கு தலா 60000 ரூபா பணப் பரிசும் கேடயமும், இரண்டாம் இடம்பெற்ற அணிக்கு 20000 ரூபா பணப்பரிசும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கேடயம் பணப் பரிசுகளை பிரதியமைச்சர் வழங்கி வைத்தார். சறப்பு துடுப்பாட்ட வீரர்களுக்கான பணப்பரிசும் கேடயமும் இதன் போது வழங்கப்பட்டன.

இக் குறித்த நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், கிண்ணியா பிரதேச செயலாளர் என பலரும் கலந்து கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers