மட்டக்களப்பில் இடம்பெற்ற மணல் சிற்ப கண்காட்சி

Report Print Kumar in சமூகம்

கடற்கரை மண்ணால் ஓவியங்கள் அமைத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற வாழ்வினை கொண்டாடும் வகையிலான மணல் சிற்ப கண்காட்சியொன்று நடைபெற்றுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்களினால் உருவாக்கப்பட்ட இந்த மணல் சிற்ப கண்காட்சி நேற்று மாலை கல்லடி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

காண்பவர்களை மிகவும் கவரும் வகையிலும் சிந்திக்க வைக்கக்கூடிய வகையிலும் இந்த மணல் சிற்ப கண்காட்சி அமைந்துள்ளது.

நூறு கோடி மக்களின் எழுச்சி 2019 என்னும் தலைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் விழிப்பூட்டும் வகையிலும் இந்த காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை பெருமளவான மக்கள் ஆவலுடன் கண்டுகளித்ததை காணமுடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers