தமிழ் கலாச்சாரத்தில் சென்று சர்வதேச நாடொன்றில் விருது வென்ற தமிழன்

Report Print Nesan Nesan in சமூகம்

சர்வதேச அறிவியல் புலமை, கண்டுபிடிப்பு மற்றும் தொழினுட்பக் கண்காட்சி மற்றும் மூன்று சர்வதேச விருதுகளும், ஐந்து நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளையும் தன்னகத்தே கொண்ட தமிழர் என்ற பெருமையை அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் ஸ்ரீகோரக்கோயில் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் பெற்றுள்ளார்.

கடந்த 2019 மாசி மாதம் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்கொஹ் நகரில் 97 நாடுகளைச்சேர்ந்த 1800 பல்கலைகழக மாணவர்கள் பங்கு பற்றிய சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்காட்சியில் தமிழர் பெருமையை வேஷ்டியில் பறைசாற்றியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவில் இரண்டாம் வருட மாணவனுமாகிய வினோஜ்குமார் தமிழர் பண்பாடு கலாசாரத்தினை பிரதிபலிக்கும் முகமாக வேஷ்டி அணிந்து விருதினை பெற்றுக்கொண்டமை விருதை பெற்றுக்கொண்டதை விட கூடுதல் ஆதரவும் வாழ்த்துகளையும் தேடித்தந்துள்ளது.

சர்வதேச அரங்கில் தமிழர் பெருமையை ஓங்கி ஒலிக்க செய்த இளம் விஞ்ஞானி எனும் சிறப்பினை கண்டுப்பிடிப்புகள் உருவ அளவில் பெரியதாகத்தான் இருக்கவேண்டும் என்ற கோட்பாட்டிற்குள் உட்பட்டதல்ல.

சிறியவையாகவும் எழிய மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையிலும் சர்வதேச சந்தையில் அவற்றிற்கான தேவையினை பொறுத்தே உத்தரவாதமும், தரமும் தான் கண்டுப்பிடிப்புக்களுக்கான அந்தஸ்த்தை உயர்த்துகின்றது என்பது இளம் கண்டுப்பிடிப்பாளனின் கருத்து.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்