மட்டக்களப்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்!

Report Print Kumar in சமூகம்

இலங்கையின் 71வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அலுவலகங்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள பிரதேச செயலகங்களில் இன்று காலை தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

பலத்த மழைக்கும் மத்தியிலும் மண்முனை, தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்றன.

இதன்போது தேசியக்கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டது. கடும் மழைக்கும் மத்தியிலும் களுதாவளை பிரதான வீதியில் கடற்படை, பொலிஸ் அணிவகுப்பு மரியாதைகளுடன் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றன.

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.சுகுணன் உட்பட பொலிஸ், இராணுவ, விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது மூவின மக்களின் கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்