தேசிய ரீதியில் இடம் பெற்ற மதம் சார்ந்த நிகழ்வு

Report Print Ashik in சமூகம்

'மதங்களினூடக நல்லிணக்கம் காணல்' எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவு நிகழ்வு இன்று காலை இலங்கை தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெஹான் பெரேரா தலைமையில் கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

'மதங்களினூடக நல்லிணக்கம் காணல்' எனும் தொனிப்பொருளில் கடந்த இரண்டு வருடம் தேசிய ரீதியில் இடம் பெற்ற மதம் சார்ந்த தலைவர்கள் மற்றும் இளைஞர்கள்,பெண்களை உள்ளடக்கி மத ரீதியான முரண்பாடுகளை நீக்கி பண்மைத்துவம் நிறைந்த மத ரீதியான சமாதானம் நிறைந்த நாட்டை உறுவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் கடந்த 2 வருடங்கள் குறித்த நிகழ்ச்சித்திட்டம் இடம் பெற்றது.

இந்த நிலையில், குறித்த நிழ்ச்சித்தட்டத்தின் இறுதி நிழ்வு இன்று காலை 9 மணியளவில் இலங்கை தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெஹான் பெரேரா தலைமையில் கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைனா டெப்லிட்ஸ் , தேசிய ஒருங்கிணைப்பு அரச கரும மொழிகள் சமூக முன்னேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் மனோ கணேசன் , கலாநிதி ஆரியரத்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நாடு பூராகவும் உள்ள சர்வ மதங்களை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் மத தலைவர்கள் மற்றும் மாற்றாற்றல் உடையோருக்கான பிரதிநிதிகள் மற்றும் பண்மைத்துவ நிகழ்சித்திட்டத்தின் பயனாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த நிகழ்வில் வைத்து பன்மைத்துவ இலங்கை சமூகத்திற்கான சாசனம் நூலும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers