சிறப்பாக இடம்பெற்ற கிழக்கு மாகாண பொங்கல் விழா

Report Print Mubarak in சமூகம்

கிழக்கு மாகாண பொங்கல் விழா திருகோணமலை - வெருகல், கருக்காமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இதில் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.என்.ஏ.புஷ்பகுமார கலந்து சிறப்பித்திருந்தார்.

இதன்போது பொது அமைப்புக்கள் மற்றும் மக்களால் 108 பானைகள் வைத்து பொங்கல் வைக்கப்பட்டிருந்தது.

அத்தோடு தமிழர்களின் பாரம்பரியத்தினை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்து காட்டும் முகமாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers