மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு, புனித மிக்கேல் கல்லூரியில் 160 மாணவர்களை முதலாம் தரத்திற்கு சேர்க்கும் கால்கோள் விழா நடைபெற்றுள்ளது.

இவ்விழா இன்று காலை பிரதி அதிபர் எஸ்.தயாபரன் மற்றும் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருள் பொன்னையா யோசப் பிரதம அதிதியாக பங்குபற்றி இருந்தார்.

இவ்விழாவில் மும்மத இறை பிரார்த்தனை, வரவேற்பு நடனம், தொனிப்பொருள் வரவேற்பு ஆகியன இடம்பெற்றுள்ளன.

புனித மிக்கேல் கல்லூரி தேசியப்பாடசாலை அதிபர் பயஸ் ஆனந்தராஜா, பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அருட்தந்தை ஜே.ஸ்ரனிஸ்லொஸ், பிரதி அதிபர் வெஸ்லியோ வாஸ், பழைய மாணவர் சங்க செயலாளர் எஸ்.செயலாளர் உதயசங்கர், பழைய மாணவர் சங்க செயலாளர் கே.தேவநம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

5ஆம் தர பரீட்சையினை நோக்காக கொண்டு மாணவர்கள் துன்புறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர்வி.மயில்வாகனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, மெதடிஸ் மத்திய கல்லூரியில் இன்று காலை பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை உள்ளீர்க்கும் கால்கோள் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.பாடசாலையின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

சிறப்பு அதிதியாக வலய கல்வி அலுவலக திட்டமிடல் பிரிவுக்கான உதவி பணிப்பாளர் வை.சி.சஜீவன், வலய ஆரம்ப பிரிவு உள்ளக சேவை ஆலோசகர் எஸ்.பூபாலசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்