தமிழ் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா பவனி இன்று பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது கல்முனைத் தரவைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து தைப்பொங்கல் பவனி அம்பாறை அரசாங்க அதிபர் ஜே.திசாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன், திறைசேரியின் முகாமைத்துவசேவை பிரதிப்பணிப்பாளர் எம்.கோபால ரெத்தினம் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகம் பாரம்பரிய பண்பாட்டு ரீதியில் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன்,செயலக கேட்போர் கூடத்தில் கலை,கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers