கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விவசாய ஆராய்ச்சி மாநாடு

Report Print Rusath in சமூகம்

பேண்தகு விவசாயத்தில் புதுமையும் கண்டுபிடிப்பும் எனும் கருப்பொருளில் இரண்டாவது விவசாய ஆராய்ச்சி மாநாடு இடம்பெற்ருள்ளது.

குறித்த மாநாடு கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் த.ஜெயசிங்கம் தலைமையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது பொங்கலூர் இந்தியன் தோட்டக்கலை ஆராட்சி மையத்தின் பிரதான விஞ்ஞானி ஈ.சிறினிவாய் ராவ் சிறப்புரையாற்றியுள்ளார்.

ஆராட்சி மாநாட்டில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கைகளில் 28 வெவ்வேறு விவசாயம் சார்ந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த மாநாட்டில் பிரதி உபவேந்தர் வைத்திய ஈ.கருணாகரன், விவசாய பீடாதிபதி பி.சிவராஜா, கலை கலாசார பீடாதிபதி மு.ரவி, விஞ்ஞான பீடாதிபதி எம்.வினோபாவா, வர்தக துறை பீடாதிபதி வி.ராகல், கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.பகீரதன் ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்