வாழைச்சேனையில் ஸ்மார்ட் சமூக வட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை, கோறளைப்பற்று ஸ்மார்ட் சமூக வட்டம் அங்குரார்ப்பணம் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

கோறளைப்பற்று செயலக கேட்போர் கூடத்தில் இன்று பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களுக்கான ஸ்மார்ட் சமூக வட்டத்திற்கான முகநூல் அங்குரார்ப்பணம் அதிதிகளால் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளின் கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, மண்முணை வடக்கு மட்டக்களப்பு, ஆரையம்பதி ஆகிய செயலகப் பிரிவுகள் மாத்திரம் செயற்படுத்தப்படவுள்ளன.

இதில் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 5 கிராம சேவகர் பிரிவுகளில் மாத்திரம் இந்த திட்டம் நடைமுறைப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் ஊடாக சமூக விழிப்புணர்வூட்டல், சமூக பிரச்சனைகள், உற்பத்தி பொருட்கள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி உட்பட்ட பல்வேறு விடயங்களை கிராம மக்களே வெளி உலகிற்கு கொண்டு வர முடியும் என தெரியவருகிறது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன், மாவட்ட செயலக சிரேஷ்ட மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.ராஜசுரேஸ், திட்ட இணைப்பாளர் க.சுமன், பிரதேச செயலக தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ம.சுரேஸ்குமார், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஸ்மாட் சமூக வட்ட உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers