சிறப்பாக நடைபெற்ற வவுனியா பிரதேச செயலக கலாசார விழா

Report Print Thileepan Thileepan in சமூகம்

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய கலாசார விழாவும், கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

பிரதேச செயலாளர் க.உதயராசா தலைமையில் வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க. பாடசாலையில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கலாசார விழாவில் தமிழ் மொழி வாழ்த்து, மங்கள இசை, வரவேற்பு நடனம், நாட்டார் இசை, சிவதாண்டவம், கிறிஸ்தவ நாடகம், பறை இசை, கிராமிய நடனம், போன்றவற்றில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு அதிதிகளால் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்ட்டிருந்தனர்.

நிகழ்வில் வவுனியா பிரதேச செயலகத்தினால் 'வவுனியம்' எனும் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டுள்ளது. நூலை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் வழங்கி வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பெற்றுள்ளார்.

அத்துடன், சிற்பத்துறை, நாடகத்துறை, கலைத்துறை, இசைத்துறை, இலக்கியத்துறை போன்றவற்றிற்கு சிறப்பாக பணியாற்றிய கலைஞர்கள் ஐவருக்கு 'கலா நேத்திரா' என்ற விருது அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers