பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! நாளை முதல் பேருந்து கட்டணம் குறைப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

நாளை நள்ளிரவு முதல் தனியார் பேருந்து கட்டணங்களை 2 வீதத்தினால் குறைக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இணங்கியுள்ளது.

அண்மையில் பெட்ரோலிய எரிபொருட்களின் விலைகளை குறைக்கப்பட்டதை அடுத்து பேருந்து கடடணங்களை குறைப்பது குறித்து இன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டதுடன் கட்டணங்களை 2 வீதத்தில் குறைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் குறைந்தப்பட்ச கட்டணத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது என இலங்கை தனியார் பேருந்து சங்க சம்மேளனத்தின் செயலாளர் அங்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers