அழகக செயற்பாடுகளுக்காக கட்டணம் அதிகரிப்பு!

Report Print Theesan in சமூகம்

வட மாகாண அழகக (சலூன்) சங்கங்களின் சம்மேளனம் முடி வெட்டுதல் உட்பட அழகக செயற்பாடுகளுக்காக புதிய விலையினை அறிமுகப்படுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட அழகக சங்கத்தின் தலைவர் விவேகானந்தன் அருண் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஏற்றத்திற்கு ஏற்ப அழகக சங்கம் தமது அங்கத்தர்களின் ஆலோசனைப்படி விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாடிக்கையாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் இவ் அதிகரிப்பு இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றத்தின் அடிப்படையில் இதனை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதன் பிரகாரம் அனைத்து அழககங்களிலும் குறித்த விலைப்பட்டியிலை வாடிக்கையாளர்கள் பார்வையிட முடியும் என்பதுடன் அழககங்களின் சேவை நேரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அழகக சங்கத்தின் தலைவர் விவேகானந்தன் அருண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers