ஏழாவது ஆண்டாக மிகவும் சிறப்பாக இடம்பெற்ற புனித மைக்கேல் கல்லூரியின் நடைபவனி

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, புனித மைக்கேல் கல்லூரியின் 145 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஏழாவது மைக்வோக் நடைபவனி நடைபெற்றுள்ளது.

குறித்த நடைபவனி ஏழாவது ஆண்டாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் பாடசாலை முன்பாக இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து ஆடல், பாடல்கள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பதாதைகளையும் ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர்.

திருமலை வீதியூடாக தாண்டவன்வெளி சந்தி வரை சென்று மீண்டும் திருமலை வீதியூடாக அரசடி சந்தி வரையில் சென்று மீண்டும் பாடசாலைக்கு நடைபவனி வந்தடைந்துள்ளது.

இந்த நடைபவனியில் அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers