பாடசாலை மாணவர்களுக்கிடையிலான துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் கிளிநொச்சி இந்து கல்லூரி அணி சாதனை

Report Print Arivakam in சமூகம்

தேசிய மட்டத்தின் 2018ற்கான 20 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் பொலன்னறுவை வித்திரிகிரிய தேசிய பாடசாலை அணியுடன் கிளிநொச்சி இந்து கல்லூரி அணி மோதியுள்ளனர்.

முதலில் துடுப்பாடிய கிளிநொச்சி இந்து கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்து பரிமாற்றங்களுக்கு 2 இலக்குகளை மாத்திரம் இழந்து 94 ஒட்டங்களை பெற்று கொண்டுள்ளது.

இதில் அதிக பட்சமாக பிரதீசன் 35 ஒட்டங்களையும் பார்த்திபன் 30 ஒட்டங்களை பெற்றனர். பதிலுக்கு 95 ஒட்டங்களை பெற்றால் வெற்றி என துடுப்பெடுத்தாடிய வித்திரிகிரிய தேசிய பாடசாலை 55 ஒட்டங்களுக்குள் சகல இலக்குகளை இழந்தனர்.

கிளிநொச்சி இந்து கல்லூரி அணி சார்பாக பேபீசன் 4 இலக்குகளையும் பார்த்தீபன் 3 இலக்குகளையும் அதிகபட்சமாக வீழ்த்தி இந்துவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

வடமாகாணத்தின் முதன் முறை துடுப்பாட்டத்தில் தேசிய மட்டத்தில் தங்க பதக்கத்தை பதிவு செய்த முதற்பாடசாலை என்ற பெருமை கிளிநொச்சி இந்து கல்லூரி பெற்றுக்கொண்டது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்