மட்டக்களப்பு - குசலானமலை குமரன் ஆலயத்தின் வருடாந்த உற்சவ நிகழ்வு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - குசலானமலை குமரன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று இரவு விசேட பூஜைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.

மட்டக்களப்பு செங்கலடியில் இருந்து பிற்பகல் ஆலய உற்சவத்திற்கான வேல்கொண்டு செல்லும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அத்துடன், மலைக்கு வேல்கொண்டுசெல்லப்பட்டு அங்கு விசேட அபிசேக ஆராதனைகள், யாகபூஜைகள் நடைபெற்று, கொடியேற்றம் இடம்பெறுள்ளது.

நீண்டகால பாரம்பரியத்திற்கு அமைவாக கொடியேற்றம் நடைபெற்றதை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்று, சுவாமி வீதியுலா நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 09ஆம் திகதி ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 2000ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், சோழ மன்னர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆலயமாக இந்த ஆலயம் காணப்படுகின்றமையை இங்குள்ள வரலாற்று எச்சங்கள் காட்டுகின்றன.

கடந்த கால யுத்த சூழ்நிலையினால் குறித்த ஆலயம் தொடர்பான வரலாறுகள் வெளிவராத நிலையில் தற்போது இந்த மலையினை நோக்கி மக்கள் செல்லும் நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers