தமது உறவுகளுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தீச்சட்டி ஏந்திய மக்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

வன்னி - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று சர்வதேச காணாமல் போனோர் தின மாகையால் தீச்சட்டி ஏந்தி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

553 ஆவது நாளாக பல்வேறு வழிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமற் போனோரின் உறவினர்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதை அவதனிக்க முடிகிறது.

இந்த நிலையில் காணாமற்போன பிள்ளைகள் தொடர்பில் நல்லதொறு தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து பிரசித்தி வாய்ந்த ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி நேற்று மாலை வற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்னாள் காணாமற்போனோரின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தி வழிபட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்..

இதன்போது குறித்த வழிபாட்டு போராட்டத்தில் கலந்திருந்த தாய் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்..

காணாமற்போன எங்களுடைய பிள்ளைகள் தொடர்பில் தீர்வுகிடைக்க வேண்டும் என்று தீருகேதீஸ்வரம் சிவன் ஆலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தோம்.

அதே நேரம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு வந்து கற்பூரச்சட்டி ஏந்தி தேங்காய் உடைத்து வழிபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எங்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த இறை வழிபாட்டை மேற்கொண்டுள்ளோம்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சக்திவாய்ந்த நாடுகளாக இருக்கின்ற படியால் எங்களுக்கு நிச்சயம் தீர்வைபெற்றுத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு நாங்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்