சுயதொழிலை மேம்படுத்துவதற்கான உதவி வழங்கும் நிகழ்வு

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - கிம்புலாவல பகுதியில் சுயதொழிலை மேம்படுத்துவதற்காக மீன் விற்பனையாளர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும், பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளதுடன், இந்த உதவிகளை மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் வழங்கி வைத்துள்ளார்.

இதன்போது, கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கல் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

அத்துடன், கிம்புலாவல பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் குப்பைகள் நிரம்பி உள்ள நிலையில் அங்கு டெங்கு நோய் பரவும் அபாயமும் நிலவுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இங்குள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதுடன் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் இந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers