மன்னாரில் இடம்பெற்ற மாட்டு வண்டிச் சவாரி போட்டி

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சங்கத்தின் அனுசரனையுடன் உமநகரி கிராம மக்களின் ஏற்பாட்டில் வடமாகாண ரீதியிலான மாட்டு வண்டி சவாரி போட்டி இன்று மாலை இடம் பெற்றது.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட உமநகரியில் இடம்பெற்ற இப்போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 4 மாவட்டங்களை சேர்ந்த 34 சோடி காளைகள் கலந்துகொண்டன.

இதன் போது ஏ.பீ.சி.டி என நான்கு பிரிவுகளாக போட்டிகள் இடம் பெற்றது. ஏ(A) பிரிவில் முதல் இடத்தை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காளைகள் பெற்றுக்கொண்டன.

அதனைத்தொடர்ந்து பீ(B) ,சி(C), டி (D) ஆகிய மூன்று பிரிவகளிலும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த காளைகள் முதல் இடத்தை பெற்றுக்கொண்டன.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சங்கத்தினர் உமநகரி கிராம மக்களுடன் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers