கிண்ணியாவிற்கு விஜயம் செய்த கல்வி அமைச்சின் அதிகாரிகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிண்ணியா பிரிவிற்குட்டபட்ட 3 பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த அதிகாரிகள் இன்று பாடசாலைகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, கிண்ணியா தேசிய பாடசாலையான மத்திய கல்லூரி, அண்மையில் தேசிய பாடசாலையாக்கப்பட்ட அல் அக்ஸா கல்லூரி மற்றும் கிண்ணியா மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு நேரில் சென்றுள்ளனர்.

அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் என்ற முறையில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் விடுத்த பணிப்பின் பிரகாரம் கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று பாடசாலைகளுக்கு விஜயம் செய்றுள்ளனர்.

இந்த விஜயத்திற்கு முன், நேற்று அக்குழுவினரை அழைத்து கல்வியமைச்சின் உயரதிகாரிகளை சந்தித்து பேசியிருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

அத்துடன், விஜயத்தில் அவர்களுக்கு உதவியாக பிரத்தியேக செயலாளர் சதாத் கரீம் கலந்து கொண்டுள்ளார்.

கல்வி தொடர்பான பல சம்மந்தப்பட்ட விடயங்களை உயரதிகாரிகள் குழு கேட்டறிந்து கொண்டதாகவும் எதிர்காலத்திலும் தேசிய பாடசாலை தொடர்பான தரவுகள் கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர் என செயலாளர் சதாத் கரீம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...