நியூசிலாந்தில் பயிலும் இலங்கை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை! விசா அனுமதிகள் இரத்து?

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 800க்கும் அதிகமான மாணவர் விசா அனுமதிகளை மீளாய்வு செய்ய நியூசிலாந்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விண்ணப்பதாரிகள் விசா கோரி விண்ணப்பிக்க வங்கியில் இருப்பில் இருக்கும் தொகையை காண்பிக்க போலியான முறைகளை கையாண்டுள்ளதாக தெரியவந்துள்ளமையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த மாணவர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் போலியாக தமது கணக்கில் போதுமான பணம் இருப்பதாக காட்டியுள்ளனர். இது சம்பந்தமான தகவல்களை நியூலாந்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் கண்டறிந்தனர்.

இலங்கையில் உள்ள நிறுவனம் ஒன்று மாணவர்களின் நிதி இருப்பை காட்டுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers