சிறப்பாக நடைபெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தேர் வெள்ளோட்டம்

Report Print Kumar in சமூகம்
125Shares
125Shares
ibctamil.com

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் மிக உயரமான ரதங்களில் ஒன்றாகவுள்ள மகா ரதத்தின் வெள்ளோட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த தேர் வெள்ளோட்டத்தினை முன்னிட்டு நேற்று காலை முதல் ஆலயத்தில் விசேட பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றுள்ளன.

வெள்ளோட்ட ஆரம்பத்தின் போது தேரை உருவாக்கிய சிறபாசிரியர் பாலச்சந்திரனால் விசேட பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து ஆலய வண்ணக்கர்மார்களினால் வடம்பூட்டப்பட்டு ரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்த இரத வெள்ளோட்ட நிகழ்வில் வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

தேருக்கான விசேட பூஜைகளை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ தேர் வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்