வான் பாதுகாப்பு விடயத்தில் இலங்கை முதலிடத்தில்

Report Print Steephen Steephen in சமூகம்

வான் பாதுகாப்பு விடயத்தில் இலங்கை தெற்காசிய பிராந்தியத்தில் முதலிடத்திற்கு வந்துள்ளது.

சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பு கடந்த மாதம் 4 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையில் சிவில் விமான சேவை அதிகார சபைக்குள் நடத்திய கணக்காய்வு அறிக்கைக்கு அமைய இலங்கை இவ்வாறு முதலிடத்திற்கு வந்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தினமும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 165 விமானங்கள் வந்து செல்கின்றன. தினமும் 27 ஆயிரம் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். அத்துடன் தினமும் 150 விமானங்கள் இலங்கையின் வான் பரப்பை பயன்படுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers