உயர்தர மாணவர்களுக்கான விசேட செயலமர்வு

Report Print Sumi in சமூகம்

உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இந்து நாகரீக பாட பயிற்சி செயலமர்வு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில், யாழ்.மத்திய கல்லூரி ரிம்பர் மண்டபத்தில் குறித்த செயலமர்வு நடைபெற்றது.

யாழ்.கல்வி வலய மாணவர்களுக்கான இக்கல்விக்குழு செயலமர்வில், அகில இலங்கை இந்து மாமன்ற கல்விக்குழுவின் செயலாளர் த.மனோகரன் மாணவர்களுக்கான கருத்துரைகளை வழங்கினார்.

கல்விக்குழு உறுப்பினர்களாக அனைத்து இலங்கை இந்து வாலிபர் சங்க தலைவரும், ஜனநாயக மக்கள் முன்ணனியின் பிரதி ஊடக செயலாளருமான எஸ். ஆனந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

பாட வளவாளர்களாக எஸ்.சிவச்சந்திரன், மு.மனோகரன், எஸ்.இதயராஜா ஆகியோர் விரிவுரைகளை ஆற்றியுள்ளார்கள்.

இந்த பயிற்சிச் செயலமர்வு நாளைய தினம் மன்னார் மாவட்ட கல்வி வலயத்திலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers