கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் சர்வதேச யோகா தினம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
34Shares
34Shares
lankasrimarket.com

கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் சர்வதேச யோக தினம் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, பொகவந்தலாவ சென்.மேரிஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வாழும் கலை அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

மலையக மக்களின் உடல், உள செயல்பாடுகளை ஊக்குவித்து ஆரோக்கியமான வாழ்க்கையினையும், மகிழ்ச்சிகரமான வாழ்க்கையினையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த சர்வதேச யோக தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த யோகா தின பயிற்சி நிகழ்வுகளை யோகா பயிற்சியில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டவர்களால் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில், சென் மேரிஸ், ஹொலி ரோசரி, கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயம் உட்பட பிரதேச பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டதுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், பிரதேசவாசிகள் அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்