காலவரையறையின்றி மூடப்பட்ட இலங்கை விவசாயக் கல்லூரி

Report Print Evlina in சமூகம்
93Shares
93Shares
lankasrimarket.com

கண்டி - குண்டசாலையிலுள்ள இலங்கை விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

குறித்த கல்லூரி மாணவர்களிடையே காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கல்லூரியின் பணிப்பாளர் அமல் அருணப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

குண்டசாலையிலுள்ள இலங்கை விவசாயக் கல்லூரியில் சுமார் 250 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், 11பேருக்கு காய்ச்சல் பரவியுள்ளது.

இதேவேளை, இவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சல் ஏனைய மாணவர்களுக்கு பரவக்கூடும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியமைக்கு அமைவாக கல்லூரியின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்